திருப்பதியில் தொழுகை செய்த சென்னை கார் டிரைவர்- தேவஸ்தானம் எச்சரிக்கை
1 min read
Chennai car driver who offered prayers at Tirupati hill – Devasthanam warns
23/5/2025-
திருப்பதி மலையில் வேற்று மத பிரசாரம், தொழுகை, போராட்டம், பொதுக்கூட்டம் நடத்த தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னையை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் கார் வாடகைக்கு எடுத்து திருப்பதி வந்தனர்.
நேற்று காலை திருப்பதிக்கு வந்த குடும்பத்தினர் தரிசனத்திற்கு சென்றனர்.
அப்போது கார் டிரைவர் பாப விநாசம் சாலையில் உள்ள மண்டபத்தில் திடீரென தொழுகை செய்தார்.
இதனை அந்த வழியாக சென்ற பக்தர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கார் டிரைவர் தொழுகை செய்யும் காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது.
இது குறித்து பக்தர்கள் திருப்பதி தேவஸ்தானத்தில் புகார் செய்தனர். தேவஸ்தான அதிகாரிகள் தொழுகையில் ஈடுபட்ட டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தரிசனத்துக்கு சென்னையிலிருந்து வந்தவர்களின் கார் ஓட்டி வந்ததாக தெரிவித்தார்.
திருப்பதி மலையில் தொழுகை செய்ய தடை உள்ளது தனக்கு தெரியாது. இதனால் தொழுகை நடத்தியதாக கார் டிரைவர் தெரிவித்தார்.
இதையடுத்து தேவஸ்தான அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து டிரைவரை அனுப்பி வைத்தனர். டிராவல்ஸ் உரிமையாளர்கள் திருப்பதிக்கு கார் ஓட்டி வரும் டிரைவர்கள் தொழுகை செய்யக்கூடாது என அறிவுரை வழங்கி அனுப்ப வேண்டும் என தெரிவித்தனர்.