பெரியாரின் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர் – யு.பி.எஸ்.சி. தேர்வில் சர்ச்சை கேள்வி
1 min read
Caste name behind Periyar’s name – Controversial question in UPSC exam
25/5/2025
மத்திய அரசின் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(யு.பி.எஸ்.சி.) சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்றது.
இந்நிலையில் யு.பி.எஸ்.சி. முதல் நிலை தேர்வில் பெரியார் குறித்து கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. இதன்படி யு.பி.எஸ்.சி. தேர்வு வினாத்தாளில் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியவர் யார்..? என கேட்கப்பட்டுள்ள கேள்வியில் 4 விடைகளில் ஒன்றாக பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என சாதிப் பெயருடன் குறிப்பிடப்பட்டுள்ளது
முன்னதாக கடந்த 1929 ஆம் ஆண்டு நடைபெற்ற செங்கல்பட்டு மாநாட்டில் தனது பெயருக்கு பின்னால் இருக்கும் சாதி பெயரை நீக்குவதாக பெரியார் அறிவித்திருந்தார். சாதி ஒழிப்புக்காக போராடிய ஈ.வெ.ராமசாமியின் பெயருக்கு பின்னால் சாதி பெயர் குறிப்பிடப்பட்டு கேள்வி கேட்கப்பட்டது தேர்வர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.