தாஜ்மஹாலில் டிரோன் எதிர்ப்பு கவசம் அமைக்க திட்டம்
1 min read
Plans to install anti-drone shield at Taj Mahal
26.5.2025
உலக அதிசங்களில் ஒன்றாக உத்தரபிரதேசத்தின் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் விளங்குகிறது. இதைக்காண தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஆக்ராவிற்கு வருகின்றனர். தாஜ்மஹாலுக்கு மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர், உ.பி. போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
இதனிடையே, இந்தியா – பாகிஸ்தான் மோதலின்போது டிரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. சீக்கியர்களின் புனிதத்தலமான குருத்வாரா உள்ளிட்ட முக்கிய இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதை இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு முறியடித்தது.
இந்நிலையில், டிரோன் தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதால் தாஜ்மஹாலில் டிரோன் எதிர்ப்பு பாதுகாப்பு கவசம் அமைக்க உ.பி. அரசு திட்டமிட்டுள்ளது. 7 முதல் 8 கிலோ மீட்டர் தூரத்தில் வரும் டிரோன்களை துள்ளியமாக தாக்கி அளிக்கும் வகையிலான டிரோன் எதிர்ப்பு கவசம் தாஜ்மஹாலில் அமைக்கப்பட உள்ளது. தாஜ்மஹாலின் வளாகத்திலேயே இந்த எதிர்ப்பு கவசம் அமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.