July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக ஒருங்கிணைந்து நிற்போம்- கனிமொழி எம்.பி. பேட்டி

1 min read

We will stand united against terrorist attacks – Kanimozhi MP Interview in Moscow

26.5.2026
மாஸ்கோ பயணத்தை முடித்துக் கொண்ட கனி மொழி எம்.பி. குழுவினர் சுலேவேனியா நாட்டிற்கு சென்றுள்ளனர்.
பகல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையும், இந்தியா- பாகிஸ்தான் இடையிலான மோதலும் குறித்து சர்வதேச நாடுகளுக்கு தெளிவாக விளக்கு வதற்காக அனைத்துக் கட்சி எம்.பி.க்களை உள்ளடக்கிய 7 குழுக்கள் உருவாக்கப்பட்டன. தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தலைமையில் ஒரு எம்.பி.க்கள் குழுவினர் ரஷ்யா சென்றனர்.

மாஸ்கோ நகரில் ரஷிய கூட்டமைப்பின் துணை வெளி யுறவு அமைச்சர் ஆண்ட்ரே குடென்னை கோவை இந்திய எம்.பி.க்கள் குழுவினர் சந்தித்து பேசினர். மேலும், லிபரல் ஜனநாயகக் கட்சி யின் கீழ் செயல்படும் சபை, சர்வதேச விவகாரக் குழுவின் தலைவர் லியோனிட் ஸ்லட்ஸ்கி தலைமையிலான ரஷ்ய எம்.பி.க்கள் அனைத்துக் கட்சி உறுப்பினர்களுடன் வட்ட மேசைக் கூட்டத்தில் கனி மொழி கருணாநிதி எம்.பி. தலைமையிலான எம்.பி. க்கள் குழுவினர் விரிவாக ஆலோசனை மேற்கொண்ட னர். அந்த சந்திப்பின்போது, பகல்காம் தாக்குதல் குறித்தும், ஆபரேஷன்சிந்தூர் குறித்தும் இந்திய எம்.பி.க்கள் குழுவினர் விரிவாக விளக்கங்களை அளித்தனர்.

இது குறித்து, கனிமொழி கருணாநிதி எம்.பி. வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதி வில், ”அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் தோற்கடிப்பதற்கான இந்தியாவின் தெளிவான மற்றும் நிபந்தனையற்ற உறுதியையும், அதை ஒழிப்பதற்கான நமது சமரசமற்ற நிலைப்பாட்டையும் தேசிய உறுதியையும் வலியுறுத்தி, சர்வதேச விவகாரங்களுக்கான ரஷ்ய எம்.பி.க்கள் குழுவின் தலைவர் லியோனிட் ஸ்லட்ஸ்கி மற்றும் உறுப்பினர்களிடம் இந்தியா வின் அனைத்துலக கட்சி நாடாளுமன்றக் குழு விளக்கம் கூறியது” என்று தெரிவித்துள்ளார்.

ரஷ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் ஒழிப்பதற்காக ரஷ்யா இந்தியாவுடன் ஒற்றுமையாக நிற்கிறது என்று தெரிவித்து உள்ளது. மாஸ்கோவில் செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி கருணாநிதி எம்.பி. ”இந்தியா-பாகிஸ்தான் மோதல் குறித்து பல தவறான தகவல்கள் பரப் பப்பட்டு வருகின்றன. அதோடு பாகிஸ்தான் அணுசக்தி நாடு என்றும், அது அணு ஆயுதங்களை கொண்டிருக்கிறது என்று தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் நாங்கள் உண்மையை வெளிப்படுத்தவும், உண்மையில் நடந்ததை தெளிவுப்படுத்தவும் விரும்பினோம்.

மேலும் அணு ஆயுதத்தை காட்டி இந்தியாவை அச்சுறுத்த முடியாது என்பதையும் நாங்கள் தெளிவாக கூற விரும்பினோம். இந்தியா எப்போதும் ஒருமைப்பாட்டிற்காகவும், நேர்மைக்காகவும், அமைதிக்காகவும் தொடர்ந்து போராடும். தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக நாம் ஒருங்கிணைந்து நிற்போம்” என்று கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.