July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

கொரோனா முகக்கவசம் கட்டாயம் இல்லை-மத்திய சுகாதாரத்துறை மந்திரி தகவல்

1 min read

Corona mask not mandatory Union Health Minister’s information

27.5.2025
இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் ஆரம்பித்தது. இது 2023-ம் ஆண்டு வரை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனாவால் ஏற்பட்ட ஊரடங்கால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்பை சந்தித்தது. இதற்கிடையே, கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரசில் உருமாற்றங்கள் ஏற்பட்டு சிறிய அளவிலான பாதிப்புகள் மட்டுமே கண்டறியப்பட்டது. ஆனால், அது தீவிர பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

இந்த நிலையில், சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட சில ஆசிய நாடுகளில் புதிய வகை கொரோனா பரவல் அதிகரித்தது. இந்தியாவிலும் சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. மே 26-ம் தேதி கணக்கின்படி இந்தியாவில் கொரோனா பாதிப்புகளின் மொத்த எண்ணிக்கை 1,011 ஆக உள்ளது.
இந்தநிலையில், முகக்கவசம் கட்டாயம் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி பிரதாப் ராவ் ஜாதவ் புதுச்சேரியில் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
தற்போதைக்கு முகக்கவசம் கட்டாயம் இல்லை. கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கைகளை மத்திய அரசு செய்துள்ளது. கொரோனா பரவலுக்கு ஏற்ப அந்தந்த மாநிலங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.