விநாயகர் சிலைகளை கூட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியா?- மோடி ஆதங்கம்
1 min read
Even Ganesha idols are being imported from abroad – Modi’s concern
28.5.2025
எவ்வளவு லாபம் கிடைத்தாலும் வெளிநாட்டு பொருட்களை விற்கக் கூடாது என்று வணிகர்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
இன்று குஜராத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மோடி, “எவ்வளவு லாபம் கிடைத்தாலும் வெளிநாட்டு பொருட்களை விற்க முடியாது என வணிகர்கள் உறுதிமொழி எடுக்க வேண்டும். துரதிஷ்டவசம் என்னவென்றால், விநாயகர் சிலைகளைக் கூட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறார்கள். அந்த சிலைகளின் கண்களும் மிகச் சிறியதாக உள்ளன, கண்கள் சரியாக திறப்பது கூட இல்லை. ஹோலி வண்ண பொடிகள் கூட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டவை.”
ஒரு நாளில் நமக்கே தெரியாமல் நிறைய வெளிநாட்டு பொருட்களை பயன்படுத்துகிறோம். நாம் பயன்படுத்தப்படும் ஹேர்பின், சீப்பு கூட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டவை தான். ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்பது நமது படைகள் கைகளில் மட்டும் இல்லை, 140 கோடி இந்தியர்கள் கைகளிலும் உள்ளது” என்று தெரிவித்தார்.