புதுச்சேரியில் மதுபானங்கள் விலை ரூ.50 முதல் ரூ.325 வரை உயர்வு
1 min read
Prices of alcoholic beverages in Puducherry increased by Rs. 50 to Rs. 325
28.5.2025
புதுச்சேரி மாநிலத்தில் ஏராளமான மதுவகைகள் தரமானதாகவும், குறைந்த விலையிலும் கிடைக்கிறது. இதனால் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து மதுப்பிரியர்கள் அதிக அளவில் புதுவைக்கு வந்து மது பானத்தை விரும்பி அருந்துகின்றனர். இதனால் புதுவை அரசின் வருவாயில் மது விற்பனை முக்கிய இடம் பிடித்துள்ளது.
புதுவையில் அரசு மற்றும் தனியார் மூலம் ஏராளமான மது விற்பனை கடைகள் உள்ளன. மதுபானங்களுக்கு விற்பனை வரிக்கு பதிலாக காலால் வரி, கூடுதல் கலால்வரி, இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது.
இந்தநிலையில் புதுச்சேரியில் பிராந்தி, விஸ்கி, ஒயின் உள்ளிட்ட மதுபானங்கள் விலை லிட்டருக்கு ரூ.50 முதல் ரூ.325 வரை உயர்தப்பட்டுள்ளது. பீர் வகைகள் ரூ.30 வரை விலை உயர்ந்துள்ளது. இதன்படி மதுபானங்களின் விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாக புதுச்சேரி கலால் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.