எவரெஸ்ட் சிகரம் ஏறிய நெல்லை சிறுமி: உதயநிதி ஸ்டாலின் பாராட்டு
1 min read
Actor Rajesh passes away. Nellai girl who climbed Mount Everest: Udhayanidhi Stalin praises her
28.5.2025
எவரஸ்ட் சிகரத்தில் 5,364 மீட்டர் உயரத்திற்கு மலையேற்றம் மேற்கொண்டு அடிவார முகாமை அடைந்த (Everest base camp) திருநெல்வேலியைச் சேர்ந்த பள்ளி மாணவி லலித் ரேணு ஸ்ரீதர் வெங்கடேஷ், இன்று தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
திருநெல்வேலியைச் சேர்ந்த 6 வயது பள்ளி மாணவி லலித் ரேணு ஸ்ரீதர் வெங்கடேஷ், தனது தந்தை ஸ்ரீதர் வெங்கடேஷ் உடன் சேர்ந்து மலையேற்றத்தில் ஆர்வம் கொண்டு மலையேற்ற பயிற்சி பெற்று வருகிறார். அவர் 6,000 அடி உயரம் உடைய வெள்ளியங்கிரி மலை முதல் 30க்கும் மேற்பட்ட பல்வேறு மலைகளில் மலையேற்றம் மேற்கொண்டுள்ளார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மலையேற்றத்தில் ஆர்வம் கொண்டுள்ள பள்ளி மாணவி லலித் ரேணு ஸ்ரீதர் வெங்கடேஷை பாராட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய கேடயத்தை வழங்கி, மேலும் தொடர்ந்து பல சாதனைகளை படைக்க வாழ்த்து தெரிவித்தார்.