July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

சிங்கப்பூரில் புறாக்களுக்கு உணவளித்த மூதாட்டிக்கு ரூ.80,000 அபராதம் விதிப்பு

1 min read

Elderly woman fined Rs. 80,000 for feeding pigeons in Singapore

29.5.2025

சிங்கப்பூரின் தோ பாயோ பகுதியில் புறாக்களுக்கு உணவளித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த ஷியாமலா என்ற மூதாட்டிக்கு ரூ.80,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பறவை, விலங்குகளுக்கு வனவிலங்கு மேலாண்மை துறையிடம் இருந்து உரிய அனுமதி பெற்று உணவளிக்க வேண்டும் என அந்நாட்டு சட்டம் கூறுவதால் ஷியாமலாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஷியாமளா புறாக்களுக்கு உணவு வழங்கி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அப்போது அரசாங்கத்திடம் ஒப்புதல் பெறாமல் வனவிலங்குகளுக்கு உணவு அழிப்பது சட்டவிரோதம் என்று அவரிடம் தெரிவித்த அதிகாரிகள் புறாக்களுக்கு உணவு அளிப்பதை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.

இதன் பிறகும், 2024 நவம்பர் வரை ஷியாமளா பலமுறை புறாக்களுக்கு உணவளித்து வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், பிப்ரவரி 19 அன்று, ஷியாமள தனது வீட்டிற்கு அருகில் புறாவை பிடிக்க முயற்சி செய்ததை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

புறாக்களுக்கு அனுமதி பெறாமல் உணவு அளித்த குற்றச்சாட்டிற்காக நீதிமன்றம் அவருக்கு இந்திய மதிப்பில் ரூ.80,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.