டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவிப்பு
1 min read
Elon Musk announces his departure from the Trump administration
29.5.2025
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு பின் எலான் மஸ்க்கை சிறந்த நிர்வாகத்துக்கான துறை தலைவர் என்ற சிறப்பு பதவியில் அமர்த்தினார். அமெரிக்க அரசின் செலவுகளை குறைப்பது, நிறுவனங்களை சீரமைப்பது போன்ற பணிகள் ஒப்படைக்கப்பட்டன. மஸ்க் பொறுப்பேற்ற பின் இதுவரை அரசின் செலவுகளில் 10 லட்சம் கோடி ரூபாயை மிச்சப்படுத்தி இருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.
மஸ்க் இந்த பதவியில் 130 நாள் பணியாற்றுவதற்கு ஒப்புக் கொண்டிருந்தார். அவரின் பதவிக்காலம் இந்த மாத இறுதியில் முடிவடைகிறது.
இந்நிலையில் நேற்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நிர்வாகத்தில் இருந்து வெளியேறுவதாக, எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-
சிறப்பு அரசு ஊழியராக எனது திட்டமிடப்பட்ட காலம் முடிவடையும் நிலையில், வீண் செலவுகளைக் குறைப்பதற்கான வாய்ப்பை வழங்கியதற்காக அதிபர் டிரம்புக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.