யு.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு
1 min read
UPSC Hall Ticket Release for Exams
29.5.2025
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் தேர்வுகள் உள்பட பல்வேறு மத்திய அரசு பணிகளுக்கான தேர்வுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஆண்டுதோறும் நடத்துகிறது. இதற்காக தேர்வர்கள் பதிவு செய்யவும், விண்ணப்பிக்கவும் புதிய இணையதளத்தை யு.பி.எஸ்.சி. நேற்று முன்தினம் தொடங்கியது.
அதன்படி https://upsconline.nic.in எனப்படும் இந்த புதிய இணையதளம் மூலம்தான் இனிமேல் மேற்படி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க முடியும். இதன் மூலம் பழைய ஒருமுறை பதிவு முறை இனிமேல் செல்லுபடியாகாது.
புதிய இணையதளம் மூலம் தேர்வர்கள் நேரம் சேமிப்பு, கடைசி நேர நெருக்கடிகள் இன்றி யு.பி.எஸ்.சி. நடத்தும் தேர்வுகளுக்கு எளிமையாக விண்ணப்பிக்க முடியும் என யு.பி.எஸ்.சி. வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) 2025 பொறியியல் (முதற்கட்ட) தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகளை வெளியிட்டுள்ளது
பதிவுசெய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் தங்கள் ஹால் டிக்கெட்டுகளை அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான upsc.gov.in மற்றும் upsconline.gov.in இலிருந்து பதிவிறக்கம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு ஜூன் 8ம் தேதி அன்று நடைபெற உள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்கு ஆன்லைனில் பெற்ற ஹால்டிக்கெட்டின் காப்பியை எடுத்துச் செல்ல வேண்டும். தங்கள் ஹால்டிக்கெட்டை சமர்ப்பிக்கத் தவறியவர்கள் தேர்வுக்கு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். கூடுதலாக, தேர்வின் ஒவ்வொரு அமர்வுக்கும் விண்ணப்பதாரர்கள் ஹால்டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள புகைப்பட அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.