பண்பொழி கோவிலில் நடிகர் மோகன்லால் தரிசனம்
1 min read
Actor Mohanlal visits Panpozhi temple
30.5.2025
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலுக்கு
பிரபல திரைபபட நடிகர் மோகன்லால் வருகை தந்தார். அப்போது அவர் கோவிலுக்கு செம்பு வேலினை காணிக்கையாக வழங்கினார்.
தென் தமிழகத்தில் உள்ள பிரபலமான திருக்கோவில்களில் ஒன்றான தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே பண்பொழி அருள்மிகு திருமலைக் குமாரசாமி திருக்கோவிலில் மலையாள நடிகர் மோகன்லால் இன்றைய தினம் சாமி தரிசனம் செய்த நிலையில், தனது வேண்டுதலுக்கு இணங்க பண்பொழி அருள்மிகு திருமலைக்குமார சுவாமி கோவிலுக்கு செம்பு வேல் ஒன்றினை காணிக்கையாக வழங்கினார்.
அவருடன் சில முக்கிய பிரமுகர்கள் மட்டும் மலையாள சினிமாவை சேர்ந்த சிலர் உடன் வந்திருந்தனர்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஒரு குன்றின் மீது அமைந்துள்ள இந்த திருமலைக் குமாரசுவாமி கோவிலின் இயற்கை அழகை ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்ததோடு மட்டுமல்லாமல் பிரசித்தி பெற்ற இந்த முருகன் திருத்தலத்திற்கு இனி வரும் காலங்களில் அடிக்கடி வருவேன் என்று நடிகர் மோகன்லால் தெரிவித்தார்.