ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத்துறை துணை இயக்குநர் கைது
1 min read
Enforcement Directorate Deputy Director arrested for accepting Rs. 50 lakh bribe
30/5/2025
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள அமலாக்க இயக்குநரகத்தின் (ED) துணை இயக்குநர், லஞ்சம் பெற்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
துணை இயக்குநர் சிந்தன் ரகுவன்ஷியை சிபிஐ கைது செய்தது. அவர் 2013 பேட்ச் இந்திய வருவாய் சேவை அதிகாரி ஆவார்.
அவர் உள்ளூர் சுரங்க தொழிலதிபர் ஒருவரிடம் ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்டு முதல் தவணையாக ரூ.20 லட்சம் பெற்றுள்ளார்.
பணமோசடி வழக்கில் இருந்து சுரங்க தொழிலதிபரின் பெயரை நீக்குவதாக உறுதியளித்து ரூ.50 லட்சம் கேட்டிருக்கிறார்.
தகவலறிந்த சிபிஐ அவரது அலுவலகத்தில் சோதனை நடத்தியது. இதில் கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சிபிஐ காவலில் சிந்தன் ரகுவன்ஷி வைக்கப்பட்டுள்ளார்.