மதுரை மத்திய சிறைச்சாலை இடம் மாறுகிறது
1 min read
Madurai Central Prison to be relocated
30.5.2025
மதுரை ஆரப்பாளையத்தில் மத்திய சிறைச்சாலை உள்ளது. தற்போது நகரம் விரிவடைந்து வருவதால், சிறைச்சாலை இங்கு செயல்படுவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. மேலும் சிறைச்சாலையில் கைதிகளுக்கும் போதிய இடவசதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ரூ.336 கோடி மதிப்பில் மேலூர் அருகே புதிய மத்திய சிறைச்சாலையை அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கான டெண்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து மதுரை மத்திய சிறைச்சாலை ஆரப்பாளையத்தில் இருந்து மேலூருக்கு இடம்மாற உள்ளது.