July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

பா.ம.க. பொருளாளர் பற்றி ராமதாஸ், அன்புமணி அடுத்தடுத்து வெளியிட்ட அறிவிப்பு

1 min read

PMK. Announcements made by Ramadoss and Anbumani regarding the treasurer

30.5.2025
பா.ம.க.வின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ந்தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தனது மகள் வழிப்பேரன் முகுந்தன் பரசுராமனை, பா.ம.க. இளைஞர் சங்கத் தலைவராக நியமித்து, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். இதற்கு, பொதுக்குழு மேடையிலேயே, அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ராமதாஸ் – அன்புமணி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இந்த சூழலில், கடந்த மாதம் 10-ந்தேதி அன்புமணி ராமதாசின் தலைவர் பதவியை பறித்து ராமதாஸ் பரபரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக தொடர்வார் என்றும் அறிவித்தார். அதேநேரம், கட்சியின் சட்ட விதிகள்படி நானே தலைவராக தொடர்வேன் என அன்புமணி ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்தார்.

சமீபத்தில், தருமபுரி மாவட்டம் கடத்தூரில் கடந்த 24-ந் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், ‘கட்சி பதவியில் இருந்து நான் ஏன் மாற்றப்பட்டேன். அப்படி நான் என்ன தவறு செய்தேன்’ என மன வேதனையுடன் பேசினார். இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் நேற்று நிருபர்களை சந்தித்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அன்புமணியை மத்திய மந்திரியாக்கி தவறு செய்துவிட்டதாக பரபரப்பு பேட்டி அளித்தார்.

உட்கட்சி மோதலில் அடுத்து என்ன நடக்கும் என்று கேள்விகள் எழுந்திருக்கும் சூழலில், கட்சியின் மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோரை சந்தித்து அன்புமணி ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள மகாராஜா திருமண மண்டபத்தில் இந்த சந்திப்பு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட 23 மாவட்டச் செயலாளர்களில் 22 மாவட்டச் செயலாளர்கள் வருகை தந்துள்ளனர். இந்த கூட்டத்தில் பா.ம.க. பொருளாளர் திலகபாமா பங்கேற்றுள்ளார். இந்த நிலையில் திலகபாமா பா.ம.க. பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். திலகபாமாவுக்கு பதிலாக திருப்பூர் சையத் மன்சூர் பா.ம.க. பொருளாளராக நியமிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பா.ம.க. கட்சி நிதியை வங்கியில் இருந்து சத்தியபாமா கையெழுத்து போட்டால்தான் எடுக்க முடியும் என்று கூறப்படுகிறது. எனவே, முன்கூட்டியே சுதாரித்துக் கொண்டு ராமதாஸ் அவரை பொருளாளர் பதவியில் இருந்து நீக்கியுள்ளார்.

அதே வேளையில், பா.ம.க.வில் பொருளாளராக திலகபாமாவே நீடிப்பார் என்று அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளராக பொதுக்குழுவால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட திலகபாமா அப்பொறுப்பில் தொடர்வார் என்று அறிவிக்கப்படுகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளும் அவருக்கு தொடர்ந்து முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.