July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் சேர்த்தால் ரூ. 25 ஆயிரம் பரிசு -தென்காசி கலெக்டர் அறிவிப்பு

1 min read

Rs. 25 thousand reward if rescued and admitted to hospital – Tenkasi Collector announces

30.5.2025
சாலை விபத்துகளில் சிக்கியவர்களை வீட்டு அவர்களின் உயிர் காக்கும் வகையில் மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ரூபாய் 25000 பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

இது பற்றி தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏகே கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :-

சாலை விபத்துகளில் சிக்கியவர்களுக்கு அவசர காலத்தில் உடனடி உதவி அளித்து, பொன்னான நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உயிர்காக்கும் பொதுமக்களை ஊக்குவிக்கும் விதமாக, இந்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், புதிய மற்றும் முக்கியமான திட்டமான ரஹ்வீர் எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்திட்டம், சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவரின் உயிரைக் காட்பாற்றியவருக்கு விருது வழங்கும் திட்டம் (GOOD SAMARITAN) என்பதற்கு மாற்றாக, 21.04.2025 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு எண் RT-25035/27/2021-RS மூலம் அமலுக்கு வந்துள்ளது.

திட்டத்தின் முக்கிய நோக்கம்: “ரஹ்-வீர் திட்டத்தின் முதன்மை நோக்கம். பொதுமக்களை
சாலை விபத்துகளில் சிக்கியவர்களுக்கு அவசரகாலத்தில் உடனடி உதவி அளிப்பதன் மூலம், அவர்களை “பொன்னான நேரத்தில்” மருத்துவமனைக்கு அல்லது அவசர சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் செல்ல ஊக்குவிப்பதாகும். இதன் மூலம், அதிகமானோர் உயிர்களைக் காப்பாற்ற முன்வர வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள்.

இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

  1. உயிர்காக்கும் “ரஹ்-வி)”களுக்கு நல்ல சமாரியர்கள்) ஒரு சம்பவத்திற்கு ரூ.25,000/- ரொக்கப் பரிசும், “பாராட்டுச் சான்றிதழும்” வழங்கப்படும்.
  2. ஒரு பெரும் விபத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உயிர்களை காப்பாற்றும் சமாரியருக்கு ரூ.25000/- வழங்கப்படும்
  3. ஒரு பெரும் விபத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட சமாரியர்கள் காப்பாற்றும் பட்சத்தில் ரூ.25000/- அவர்களுக்கு இடையே பகிர்தளிக்கப்படும்.
  4. ஓர் பெரும் விபத்தில் ஒன்றுக்கு மேற்ப்பட்ட பாதிக்கப்பட்ட நபர்களை ஒன்றுக்கு மேற்ப்பட்ட சமாரியர்கள் காப்பாற்றும் பட்சத்தில் ஒவ்வொரு சமாரியருக்கும் ரூ.25000/-க்கு மிகாமல் வழங்கப்படும்.

தேசிய அளவிலான விருதுகள்:

ஆண்டுதோறும், தகுதியான “ரஹ்-வீர்”களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் 10 பேருக்கு, தலா ரூ. 1,00,000/- தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்படும்.

சட்டப் பாதுகாப்பு:

மோட்டார் வாகள திருத்தச் சட்டம் 2019 இன் பிரிவு 134A நாள்:29.09.2020 அன்று அறிவிக்கப்பட்ட விதிகளின்படி, நல்ல சமாரியர்கள் சட்ட நடவடிக்கைகளில் இருந்து பாதுகாக்கப்படுவார்கள்
இவ்வாறு தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ. கே. கமல்கிஷோர் அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.