தமிழகத்தில் பள்ளிகள் 2-ந் தேதி திறப்பு
1 min read
Schools in Tamil Nadu to reopen on 2nd
31.5.2025
தமிழ்நாட்டில் ஜூன் 9 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தகவல் வெளியானது.
இதற்கு தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.
அதன்படி, திட்டமிட்டபடி ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, 1 முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஜூன் 2ல் பள்ளிகள் திட்டமிட்டப்படி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.
மேலும், கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ஆம் தேதி பள்ளிகளை திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி கல்வித்துறை விழகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.