தென்காசியில் ஒரே நாளில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
1 min read
3 people arrested in Tenkasi in one day under the Goonda Act
31.5.2025
தென்காசி மாவட்டத்தில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த மூன்று பேர்களை மாவட்ட நிர்வாகம் ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
தென்காசி மாவட்டம், சின்ன கோவிலாங்குளம் காவல் நிலைய கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான ஊத்தங்குளம் ஆதிமூலம் (எ) தங்கதுரை என்பவரின் மகன் தினேஷ்(வயது 25), கீழக்கலங்கள் கீழத் தெருவை சேர்ந்த வெங்கடாசலபதி என்பவரின் மகன் சிவசக்தி மற்றும் செங்கோட்டை காவல் நிலைய திருட்டு வழக்கின் குற்றவாளியான மேலூர் செங்கோட்டை பள்ளிவாசல் தெருவை சேர்ந்த பீர்முகமது என்பவரின் மகன் முஸ்தபா கமால் (வயது 33) ஆகியோர் மீது பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி *மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். அரவிந்த் பரிந்துரையின் பேரில், தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் உத்தரவின் பேரில் மேற்படி மூன்று நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.