July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு தனித்துவமான 12 இலக்கு குறியீடு- மத்திய அரசு திட்டம்

1 min read

A unique 12-target code for every household – Central Government scheme

31.5.2025
ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு தனித்துவமான 12 இலக்கு குறியீடுடன் கூடிய டிஜிட்டல் முகவரியை கொண்டு வரும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கி உள்ளது.

நாட்டில் உள்ள ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் தனித்துவமான அடையாளச் சான்று என்பது அவசியம். அதற்காகவே பிரத்யேகமாக கொண்டு வரப்பட்டது தான் ஆதார் அட்டை. அதிகாரப்பூர்வ அடையாள சான்றாக அறிவிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

எப்படி ஒரு மனிதனின் தனித்துவ அடையாளமாக ஆதார் உள்ளதோ அதுபோன்ற ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்துவமான முகவரியை கொண்டு வந்து நடைமுறைப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கி உள்ளது. ஒரு ஆதார் போன்று, இனி ஒவ்வொரு வீட்டுக்கும் டிஜிட்டல் முகவரியை கட்டமைக்க வேண்டும் என்பதே இதன் மையப்புள்ளி எனலாம்.

ஆதார் எண்ணை போல டிஜிபின் (DIGIPIN) எனப்படும் 12 இலக்கு குறியீடு இந்த முகவரியில் இருக்கும். முழுக்க, முழுக்க ஜிபிஎஸ் அடிப்படையிலான துல்லியமாக ஒரு வீட்டின் அல்லது ஒரு இடத்தின் முகவரியை கண்டறிய உதவுவதே இதன் நோக்கம்.

தனித்துவமான டிஜிட்டல் ஐ.டி., 53 ஆண்டுகாலமாக பயன்படுத்தப்பட்டு வரும் பின்கோடு எனப்படும் அஞ்சலக அடையாள எண்ணின் மறுவடிவம் என குறிப்பிடலாம். எப்படி ஒரு பின்கோடு மூலம் எந்த பகுதிக்கு ஒரு கடிதம் அனுப்பப்படுகிறது என்பதை அடையாளம் காண்பது போல டிஜிட்டல் ஐடி அமைக்கப்படும்.
இதற்காக தபால்துறை சார்பில் பூகோள ரீதியான தரவுகளைக் கொண்டு டிஜிட்டல் முகவரிகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் அண்மையில் தொடங்கப்பட்டு உள்ளது. ஒரு பகுதியை மட்டும் குறிப்பிடும் பின்கோடு போல், ஒரு வீட்டையோ அல்லது அலுவலகத்தையோ குறிக்கும் தனித்துவமான, துல்லியான அடையாள நடைமுறை என்று மூத்த அஞ்சலக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.