July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

அருணாச்சல பிரதேசம்: நிலச்சரிவில் கார் கவிழ்ந்ததில் 7 பேர் பலி

1 min read

Arunachal Pradesh: 7 killed as car overturns in landslide

31.5.2025
வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ச்சியாக பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. அசாம், சிக்கிம் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது.
இந்நிலையில் அருணாச்சலப் பிரதேசத்தின் பனா-செப்பா சாலையில் நேற்று இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் கார் பள்ளத்தாக்கில் விழுந்ததில் 7 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பலத்த மழையின் மத்தியில் நிலச்சரிவு ஏற்பட்டபோது, பள்ளத்தாக்கில் விழுந்த காரில் இரண்டு குடும்பங்கள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறந்தவர்களில் 32 வயதான சஞ்சு, அவரது மனைவி தாசும், அவர்களது இரண்டு குழந்தைகள், கச்சுங் (5) மற்றும் நிச்சா (2), ஒரு கர்ப்பிணித் தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் ஆகியோர் அடங்குவர்.

பல பயணிகளை ஏற்றிச் சென்ற ஒரு சுமோ வாகனமும் நிலச்சரிவில் சிக்கிக் கொண்டது. சரிவு ஏற்பட்ட பகுதிக்கு சற்று தள்ளி இருந்ததால் நல்வாய்ப்பாக அந்த அதில் இருந்தவர்கள் உயிர் தப்பினர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.