குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை நீட்டிப்பு
1 min read
Ban on bathing at Courtallam Falls extended
31.5.2025
தென்காசி மாவட்டம் மேற்கு தொடாச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை தீவிரம் அடைந்து உள்ளதால், குண்டாறு அணை நிரம்பியது. குற்றாலம், அருவிகளில் 6 வது நாளாக குளிக்க தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. நெல்லை, தென்காசி மாவட்டங்களி லும் கடந்த 1 வாரத்துக்கு மேலாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது.நேற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை தீவிர மாசு பெய்து வருகிறது. மலை அடிவார பகுதி மற்றும் நகர் பகுதிகளிலும் சாரல் மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது.
இதனால் தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங் களில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட் டம் வேகமாக உயர்ந்து வரு கிறது. மேலும் 500க்கும் மேற்பட்ட பாசன குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது
இந்த நிலையில் குண்டாறு அணை நேற்று காலைநிரம்பி, தண்ணீர் மறுகால் பாய்ந்தது. அதாவது செங்கோட்டை அருகே உள்ள குண்டாறு அணையின் உயரம் 36.10 அடி யாகும். தொடர் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இன்று காலை அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. அணைக்கு வரும் 35 கன அடி தண்ணீர் அப்படியே உபரி நீராக வழிந்தோடி செல்கிறது.
இதேபோல் நெல்லை மாவட்டம் சேர்வலாறு அணையும் நிரம்பும் நிலையில் உள்ளது. 156 அடி உயரம் கொண்ட இந்த அணை நீர் மட்டம் நேற்று 137 அடியாக இருந்தது. இன்று மேலும் 6 அடி உயர்ந்து 143 அடியாக நீர்மட்டம் இருந் தது இந்த அணை உச்ச நீர் மட்டத்தை தொடுவதற்கு 13 அடி மட்டுமே பாக்கி இருப்ப தால் ஓரிருநாட்களில் நிரம்பி
விடும் என்று எதிர்பார்க்கப்ப டுகிறது.
143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட் டம் நேற்று 108.10 அடியாக இருந்தது. இன்று மேலும் 5.40 அடி உயர்ந்து 113.50 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,898 கள அடிவந்துகொண்டிருக்கிறது. இந்த அணையில் நீர்மட்டம் வேகமாகஉயர்ந்து வருவதால் தாமிரபரணி ஆற்றில் கூடுத லாக தண்ணீர் ஓடுகிறது.
மணிமுத்தாறு அணை நீர் மட்டமும் படிப்படியாக உயர்ந்து 90 அடியை எட்டி உள்ளது. அணைக்கு நீர்வ ரத்து வினாடிக்கு 1,703 கன அடியாக அதிகரித்தது. பாசனத்துக்கு 45 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கொடுமுடியாறு அணை பகுதியில் பலத்த மழை பெய் ததால் அணைக்குவரும் தண்ணீரின் அளவு 345 கன அடி யாக அதிகரித்து உள்ளது. இந்த அணை நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்து 42.25 அடியாக உள்ளது. இதுதவிர வடக்கு பச்சையாறு அணைக்கும் நீர்வரத் தொடங்கி, வினாடிக்கு 35 கன அடி தண்ணீர் வந்து கொண் டிருக்கிறது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனாநதி அணை நீர் மட்டம் 4.50 அடி உயர்ந்து 62.10 அடியாக உள்ளது. நீர்வரத்து 311 கன அடியாகவும், வெளியேற்றம் 46 கன அடி யாகவும் உள்ளது. ராமநதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3.50 அடி உயர்ந்து 72.50 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 134 கன அடியாகவும், வெளியேற்றம் 10 கன அடியாகவும் உள்ளது.
கருப்பாநதி அணை பகுதியில் பெய்த பலத்த மழையால் நீர்வரத்து 323 கன அடியாக அதிகரித்து உள்ளது. நீர்மட் டம் 9 அடி உயர்ந்து 59 அடி யாகஉள்ளது. அடவிநயினார் அணை நீர்மட்டம் 14.50 அடி உயர்ந்து 93 அடியாக உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் கடந்த ஒரு வார காலமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது நேற்றும் அதே நிலை நீடித்தது. எனவே அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட் டுகிறது. பாதுகாப்பு கருதி இன்றும் 6-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இன்னும் ஓரிரு நாட்கள் மழை குறைந்து நீர்வரத்து சீரானதும், சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என போலிசார் தெரிவித்தனர்.
இதேபோல் நெல்லை மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அருவியிலும் பாபனாசம் பகுதியில் உள்ள அகஸ்தியர் அருவியிலும் 5-வது நாளாக இன்றும் வெள்ளப்பெருக்கு நீடித்தது. இதனால் அங்கும் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.
தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று காலை 8 மணியுடன் முடிவ பெய்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
மாஞ்சோலை -80, காக் காச்சி -102, நாலுமுக்கு -122, ஊத்து -117, பாபநாசம் -64. சேர்வலாறு -39, மணிமுத் தாறு-26, கொடுமுடியாறு -57-நம்பியாறு -13, அம்பை -15. சேரன்மாதேவி -11. பாளை யங்கோட்டை-3, ராதாபுரம் -18, கன்னடியன் அணைக் கட்டு -17. களக்காடு -8, நாக குநேரி -4, மூலைக்கரைட் பட்டி -6, தென்காசி -47 கடனாநதி -39, ராமநதி 4C ஆய்க்குடி -22, கருப்பாநதி -56, சங்கரன்கோவில் செங்கோட்டை 52, கு டாறு -68, அடவிநயினா -56, என்ற அளவில் மழை பதிவாகியுள்ளது.