திருப்பதி நடைபாதையில் இரவில் பக்தர்களுக்கு தடை
1 min read
Devotees banned from Tirupati footpath at night
31.5.2025
திருப்பதி மலையில் உள்ள நடைபாதை பகுதியில் குட்டிகளுடன் நடமாடும் சிறுத்தை, கரடியால் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நடைபாதையில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி மலை அடிவாரம் அலிபிரியில் இருந்து பக்தர்கள் திருமலைக்கு நடந்து செல்லும் வழித்தடத்தில் உள்ள பிரம்மாண்ட ஆஞ்சநேயர் சுவாமி கோவில் தொடங்கி நரசிம்ம சுவாமி கோவில் வரை சுமார் இரண்டரை கிலோ மீட்டர் பகுதி வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது
இந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சோலார் ட்ராப் கேமராவில், இரவில் கரடி ஒன்று இரண்டு குட்டிகளுடன் நடமாடியதும், சிறுத்தை ஒன்று தன் குட்டியுடன் நடமாடியதும் பதிவாகியுள்ளதால், இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.