ராமேஸ்வரம் கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம்
1 min read
Governor R.N. Ravi Swami visits Rameswaram temple
31.5.2025
தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று மாலை ராமேஸ்வரம் வருகை தந்தார். அங்கு அவரை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்திஷ் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இன்று அதிகாலை கவர்னர் ஆர்.என்.ரவி அக்னி தீர்த்த கடற்கரைக்கு சென்று புனித நீராடினார். பின்னர் ராமேஸ்வரம் கோவில் வளாகத்தில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களிலும் தனது மனைவியுடன் நீராடிய கவர்னர், கோவிலுக்குள் சென்று ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளை வழிபட்டார்.தொடர்ந்து அங்கு நடைபெற்ற ஸ்படிகலிங்க பூஜையில் மனைவியுடன் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தார். முன்னதாக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.