சமையல் எண்ணெய்க்கு கலால் வரியை குறைப்பு
1 min read
Reduction in excise duty on cooking oil
31.5.2025
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால், நாடு முழுவதும் சமையல் எண்ணெய் விலை 25 சதவீதம் முதல் 34 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட, மே 28 அன்று பாமாயிலின் சராசரி சில்லறை விலை லிட்டருக்கு 34 சதவீதம் உயர்ந்து ரூ.134 ஆக இருந்தது. அதே நேரத்தில் சூரியகாந்தி எண்ணெய் விலை 30 சதவீதம் அதிகமாக இருந்தது.
சோயா எண்ணெய் உள்நாட்டு சந்தையில் 18 சதவீதம் உயர்ந்து லிட்டருக்கு ரூ.147க்கு விற்கப்பட்டது. கடுகு எண்ணெய் விலை சராசரியாக 25சதவீதம் அதிகரித்து லிட்டருக்கு ரூ.170 க்கும் அதிகமாக உள்ளது.
இந்நிலையில் சூரியகாந்தி எண்ணெய், பாமாயில், சோயா பீன்ஸ் ஆயில் விலைகள் தொடர்ந்து அதிகரிக்கும் நிலையை சரிகட்ட இறக்குமதிக்கான கலால் வரியை 10 சதவீதம் குறைந்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வரிக்குறைப்பு அமலுக்கு வந்ததுள்ளது.