July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசி அரசு மருத்துவ மனையில் புதிய கட்டிடம்- முதல்வர் திறந்து வைத்தார்.

1 min read


The Chief Minister inaugurated a new building at the Tenkasi Government Hospital

31.5.2025
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.1.25 கோடியில் உள்நோயாளிகளின் உதவிக்கு வருபவர்கள் தங்கும் கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சென்னையில் கானொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து தென்காசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தென்காசி
கலெக்டர்,எம்எல்ஏ, சேர்மன் ஆகியோர் பங்கேற்றனர்.

தென்காசி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.1.25 கோடியில் உள்நோயாளிக ளின் உதவிக்கு வருபவர்கள் தங்குவதற்காக கட்டப்பட் டுள்ள சிறப்பு வசிப்பிட கட்டிடத்தினை சென்னை யிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து தென்காசி அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட கலெக்டர் ஏ. கே.கமல்கிஷோர், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார் , தென்காசி நகர்மன்ற தலைவர் ஆர்.சாதிர் ஆகியோர் குத்து விளக்கேற்றினர்.

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி மண்டல இயக்குநர் விஜய லட்சுமி, நகராட்சி நிர்வாக மண்டல பொறியாளர் (பொறுப்பு) சனல்குமார், தென்காசி நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், பொறியாளர் ஹசீனா, உதவி பொறி யாளர் ஜெயப்பிரியா, சுகாதார அலுவலர் முகம்மது இஸ்மாயில், சுகாதார ஆய்வாளர் ஈஸ்வரன்,சுகா தாரப் பணிகள் இணை இயக்குநர் பிரேமலதா, அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ் வின் டாக்டர் பனிகவதி தென்காசி
நகர்மன்ற உறுப்பினர்கள் அபுபக்கர், முத்துகிருஷ்ணன். ஜெயலட்சுமி, சுமதி, கல்பனா, கார்த்திகா, நாகூர் மீரான், சுப்பிரமணியன், குருசாமி, ஆசிக்முபினா. ரெஜினா, மகேஸ்வரி, சுல் தான் ஷெரீப், மஞ்சுளா, திமுக நகர பொருளா ளர் ஷேக்பரீத், மாவட்ட பொறியாளர் அணி தலைவர் சே.தங்கபாண்டியன், இளைஞரணி முரளி, மாணவாணி ராஜன்
அறங்காவலர் குழு இசக்கிரவி, வர்த்தக அணி சன் ராஜா, சபரிசங்கர், வட்ட நிர்வாகிகள் முருகே சன், பொத்தை முருகன், கங்காதரன், காமீல், தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் மாடசாமி ஜோதிடர், வட்டார தலைவர் குற்றாலம் பெருமாள், நகரப் பொருளாளர் ஈஸ்வரன், மாவட்ட பொது செயலாளர் சந்தோஷ், சித்திக், பிரேம்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.