கோவில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த ரூ.25 ஆயிரம்
1 min read
Rs. 25 thousand for performing dance and song performances at temple festivals
4.6.2025
மதுரை ஐகோர்ட்டு கிளை அமர்வுக்கு உட்பட்ட 14 மாவட்டங்களில் கோவில் திருவிழாக்களின்போது ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட 7-க்கும் மேற்பட்ட மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தன.
இந்த மனுக்களை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதி புகழேந்தி, கோவில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து உத்தரவிட்டார். இதன்படி, கோவில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்துவபர்கள் ரூ.25 ஆயிரம் முன்பணத்தை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் செயலாளரிடம் செலுத்த வேண்டும் என்றும், அந்த பணத்தை வைத்து கிராமப்புறங்களில் உள்ள நீர்நிலைகளை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.