கடையம் பகுதியில் டிரோன் மூலம் மருந்து உரம் தெளித்தல் பயிற்சி
1 min read
Drone spraying of pesticides and fertilizers in the Kadayam area
8.6.2025
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள மந்தியூர் பகுதியில் இந்திய உர கூட்டுறவு நிறுவனத்தின் உதவியுடன் விவசாயிகள் ட்ரோன் மூலம் மருந்து உரம் தெளிப்பதை செயல் விளக்கத்துடன் செய்து காண்பிக்கப்பட்டது.
இந்திய அரசின் வேளாண் அமைச்சகம் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் வழிகாட்டுதலின் படி விவசாய விளைச்சலை அதிகரிக்கும் நோக்கில் விஞ்ஞானிகளையும் விவசாயிகளையும் இணைக்கும் வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சார இயக்கம் மே 29 முதல் ஜூன் 12 வரை 15 நாட்களுக்கு தென்காசி மாவட்டம் முழுவதும் நடைபெறவுள்ளது.
கடையநல்லூர் வேளாண் அறிவியல் மையம் மூலம் இப்பிரச்சாரம் ஜூன் மாதம் 7 ம் தேதி தெற்கு கடையம், மீனாட்சிபுரம் மற்றும் மந்தியூர் கிராமங்களில் நடைபெற்றது. இதில் காரீஃப் பருவ பயிர்களுக்கான புதிய இரகங்கள், தொழில்நுட்பங்கள் மற்றும் வேளாண் வேளாண் திட்டங்கள் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் ட்ரோன் மூலம் மருந்து உரம் தெளிப்பதை செயல் விளக்கத்துடன் இந்திய உர கூட்டுறவு நிறுவனத்தின் உதவியுடன் மந்தியூர் கிராமத்தில் காட்சிப்படுத்தப் பட்டது. வேளாண் விஞ்ஞானிகள், வேளாண்மை துறை, கால்நடை துறை, மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கு கொண்டனர்.