சாம்பவர் வடகரை்: கிணற்றில் பெண் பிணம்
1 min read
Sambhavarvadakarai: Woman’s body found in wel
8/6/2025
தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை பகுதியில் காணாமல் போன பெண்
கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை பேரூராட்சி பகுதி சுடலைமாடன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் சித்திரபுத்திரன் இவரது மனைவி முப்பு டாதி (வயது 60). இவர் கடந்த 4ம்தேதி மாலை வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து முப்புடாதியின் உறவினர்கள் சாம்பவர் வடகரை காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
இந்நிலையில் நேற்று காலை சித்திரபுத்திரன் வீட்டின் பின்பு றம் உள்ள கிணற்றில் முப்புடாதி உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த சாம்பவர்வடகரை போலீசார் கொடுத்த தகவலின் பேரில் சுரண்டை தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசந்தர் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்புபடை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் மிதந்து கொண்டிருந்த முப்புடாதியின்
உடலை மீட்டனர்.
அதனைத் தொடர்ந்து போலீசார் முப்புடாதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சாம்பவர் வடகரை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.