இந்தியாவிற்கே தலைமையாக தமிழ்நாடு உள்ளது: மு.க.ஸ்டாலின் பெருமிதம்
1 min read
Tamil Nadu is the leader of India: MK Stalin is proud
10.6.2025
சென்னை தரமணியில் உலக வங்கியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நவீன உலகளாவிய வணிக மையத்தை தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியாவிற்கே தலைமையாக தமிழ்நாடு திகழ்கிறது. மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் உலக வங்கிப் பெரும் பங்கு வகிக்கிறது. உலக வங்கியின் உதவியுடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. 3-ஆம் கட்டமாக நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் மூலம் மக்களின் தேவைகளை நிறைவேற்ற பெரும் பங்க வகிக்கிறது. இதற்க உலக வங்கி பெரிய அளவில் உதவியிருக்கிறது.ஏழைகளுக்கான குடியிருப்புகளை உருவாக்க 190 மல்லியன் டாலர் கடனை உலக வங்கி தந்துள்ளது.
உலக வங்கி உதவியுடன் வரும் 5 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். ஊரகப் பகுதிகளை மேம்படுத்தும் வகையில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம், 20 லட்சம் ஊரகப் பகுதி ஏழை மக்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர். மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் உலக வங்கியுடன் வெறும் நிதி மட்டுமல்லாமல் நிபுணத்துவத்தையும் பெற்று தமிழகம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் இந்தியாவின் என்ஜின்-ஆக தமிழ்நாடு விளங்குகிறது தமிழ்நட்டின் பொருளாதார முதுகெலும்பு பெண்கள்தான்” இவ்வாறு அவர் பேசினார்.