கேரளாவில் வாட்ஸ்-அப் குழுவை உருவாக்கி விபசாரத்தில் ஈடுபட்ட கும்பல்
1 min read
Gang involved in prostitution by creating WhatsApp group in Kerala
11/6/2025
கேரளாவில் கோழிக்கோடு மலப்பரம்பு ஐயப்பாடி சாலையில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. பிரபல ஆஸ்பத்திரிக்கு அருகாமையில் இருந்த அந்த அடுக்குமாடி குடியிருப்பில், சிகிச்சைக்கு வரக்கூடியவர்கள் பலர் தங்கியிருந் திருக்கிறார்கள். அவர்களுடன் விபசாரகும்பலும் அறைகளை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்திருக்கிறது. இதனையறிந்த போலீசார், அந்த குடியிருப்புக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு விபசாரம் நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அழகிகளை வைத்து விபசாரம் நடத்திய 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் விபசாரம் நடத்த “வாட்ஸ் அப்-ல் குழுவை உருவாக்கி உள்ளனர். அதில் அழகிகளை தேடிவரும் தங்களின் வாடிக்கையாளர்களை இணைத்துள்ளனர். தங்களிடம் இருக்கும் அழகிகள் அவர்களுடன் உல்லாசமாக இருப்பதற்கான பணம் உள்ளிட்ட விவரங்களை விபசார கும்பல் “வாட்ஸ் அப்” குழுவில் பதிவிடும். அதனை குழுவில் இருக்கும் வாடிக்கையாளர்கள் பார்த்து அறிந்து கொள்வார்கள்.
பின்பு அவர்கள் “வாட்ஸ் அப் மூலமாகவே விபசார கும்பலை தொடர்பு கொண்டு அழகிகளுடன் உல்லாசமாக இருக்க வரவேண்டிய நேரம் உள்ளிட்ட அனைத்து விவரங்ககளையும் அறிந்துகொண்டு அதற்கு தகுந்தாற்போல் அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்து சென்றுள்ளனர்.
விபசாரம் நடந்த அடுக்குமாடி குடியிருப்பில் மருத்துவ மனையில் சிகிச்சை பெறக்கூடிய நோயாளிகளின் உறவினர்களான ஏராளமானோர் தங்கியிருந்துள்ளனர். அவர்களும் இந்த அடுக்கு மாடி குடியிருப்பில் விபசார அழகிகளுடன் உல்லாசமாக இருந்துள்ளனர். விபசார கும்பலின் “வாட்ஸ் அப்” குழுவில் நோயாளிகளின் உறவினர்களே அதிகளவில் இருக்கின்றனர்.மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் கைதானவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.