ஏ.சி. பயன்படுத்த விரைவில் புதிய விதிமுறை
1 min read
New rules for using AC soon
11.6.2025
நாடு முழுவதும் ஏசி-க்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் கீழ் இல்லாத அளவுக்கு மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மக்களிடையே ஏசி பயன்பாடு தற்போது அதிகரித்துள்ளது. வசதி படைத்தவர்கள் மட்டுமின்றி நடுத்தர மக்கள் கூட வீட்டில் ஏசி வாங்கி பயன்படுத்தினார்கள். வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றில் தற்போது பயன்படுத்தப்படும் ஏசி-க்களில் குறைந்தபட்சமாக 16 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சமாக 32 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும் வரை மாற்றியமைக்கும் வசதி உள்ளது.
இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை மந்திரி மனோகர்லால் கட்டார், ஏசி வெப்ப நிலை அளவில் மாற்றம் கொண்டு வர மூடிவு செய்து இருப்பதாக கூறினார். இது தொடர்பாக அவர் செய்தியாளர் கிடைத்த பேட்டியில் கூறியதாவது:
ஏசி-க்களில் வெப்பநிலை அளவீட்டை ஒழுங்குபடுத்துவதற்கான தரநிலையைச் சோதனை அடிப்படையில் விரைவில் வெளியிடப்பட உள்ளது. இதன்படி, குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும், அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் இருக்கும்.
வீடுகள், அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்களில் பயன்படுத்தப்படும் ஏசி-க்களுக்கு மட்டுமன்றி கார்களில் பயன்படுத்தப்படும் ஏசி-க்களுக்கும் பொருந்தும். பருவநிலை மாற்றம், அதிகரித்துவரும் வெப்பநிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும் மின்சாரத் தேவையைக் கட்டுப்படுத்தும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது’
இவ்வாறு கூறினார்.
இந்த நடைமுறை அமலுக்கு வந்தால் இனிமேல் அறிமுகப்படுத்தப்படும் ஏசி சாதனங்களில் குறைந்தபட்ச வெப்ப நிலை 20 கீழ் இருக்காது அதேபோல் அதிகபட்ச வெப்பநடையும் 28 க்கு மேல் கொண்டு போக முடியாது. சோதனை அடிப்படையில் இது கொண்டு வரப்பட இருப்பதாகவும் விரைவில் அமல்படுத்தப்படும் எனவும் கட்டாக கூறியுள்ளார்.