தோரணமலையில் பவுர்ணமியை முன்னிட்டு 27 நட்சத்திர மரங்களுக்கு சிறப்பு பூஜை
1 min read
Special puja to the 27 star trees on the occasion of the full moon at Thoranamalai
12.6.2025
தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ளது தோரணமலை ஸ்ரீ முருகன் கோவில் இக்கோவில் சித்தர்களால் வழிபடப்பட்ட புராதானமும் பெருமையும் உடைய கோயிலாகும். இந்த கோவிலில் மாதம் தோறும் பௌர்ணமி முன்னிட்டு கிரிவலம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது வழக்கம் இந்த நிலையில் இன்று பௌர்ணமி முன்னிட்டு அதிகாலையில் சுமார் 6.5 கிலோ மீட்டர் தூரம் உள்ள மலையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டனர் .
அதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது .இதில் மாணவச் செல்வங்கள் நல்ல முறையில் படித்து நல்ல பண்புகளுடன் வளர்த்து நாட்டிற்கு பெருமை சேர்த்திட வேண்டும் .நாட்டில் பயங்கரவாதம் அறவே ஒழித்து வளம் கண்ட நாடாக உலக அரங்கில் சிறந்திட வேண்டும் இளைய சமுதாயம் போதை பாதை தவிர்த்து மேதையாகும் பாதையில் பயணிக்க வேண்டும் என பக்தர்கள் பிரார்த்தனை நோற்கின்றனர் .
முன்னதாக மலை அடிவாரத்தில் உள்ள விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பின்பு விநாயகர் கோவில் பின்புறம் உள்ள அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் விருட்சக ராஜ பூஜை நடைபெற்றது.அடுத்ததாக கோவிலில் நடப்பட்டுள்ள 27 நட்சத்திரங்களுக்கான மரங்களுக்கான சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுக்கு உண்டான நட்சத்திர மரத்தில் மலர் தூவி வழிபாடு மேற்கொண்டனர் .தொடர்ந்து 27 ராசி நட்சத்திரம் மரங்களுக்கு அபிஷேகம் நடைபெற்றது . கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. காலை மதியம் அன்னதானம் நடைபெற்றது .நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.