யுபிஎஸ்சி தேர்வில் தமிழகம் சாதனை – மு.க.ஸ்டாலின் பெருமிதம்சென்னை,
1 min read
Tamil Nadu’s achievement in UPSC exam – MK Stalin proud Chennai,
12.6.2025
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
“தமிழ்நாடு அரசின் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியிலும் “நான் முதல்வன்” திட்டத்திலும் பயின்ற நம் மாணவர்கள் யுபிஎஸ்சி முதனிலைத் தேர்வு முடிவுகளில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் சாதனை படைத்துள்ளனர்!
முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்விலும் அடுத்து நீங்கள் முத்திரை பதிக்க வாழ்த்துகிறேன். உங்கள் வெற்றிமுகங்களை நேரில் காண ஆவலாய் இருக்கிறேன். இந்தச் சாதனைக்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகளுக்கும் பயிற்றுநர்களுக்கும் என் பாராட்டுகளை உரித்தாக்குகிறேன்! தமிழ்க்கொடி உயர உயரப் பறக்கட்டும்!”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.