செங்கோட்டை பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம்
1 min read
Wild elephants rampage in Sengottai area
14/6/2024
தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் 3 காட்டு யானைகள் கடந்த ஒரு வார காலமாக விவசாய நிலங்கள் மற்றும் ஊர் பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்து வருகிறது இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
செங்கோட்டை அருகே உள்ள கற்குடி பகுதியில் தொடர்ந்து பத்து நாட்களுக்கு மேலாக முகாமிட்டிருந்த காட்டு யானைகள் அங்கிருந்த தென்னை மரங்கள் வாழை மரங்கள் மா மரங்கள் உள்ளிட்ட மரங்களை அழித்து நாசம் செய்து வந்தது. அதனை தொடர்ந்து ஊர் பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்தும், கூச்சல் போட்டும் அங்கிருந்து விரட்டினார்கள்.
இப்போது அந்த காட்டு
யாணைகள் செங்கோட்டையை அடுத்த புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கண்ணுப்புளி மெட்டு காடுவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளை நிலங்களில் தென்னை மரங்கள், மா மரங்கள், பலா மரங்கள், கூந்தப்பனை மரங்கள் உள்ளிட்ட மரங்களை அடியோடு சாய்த்து நாசம் செய்து வருகிறது. இதனால் விவசாயிகள் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.
எனவே விவசாயிகள் காட்டு யானைகளை வனப்பகுதிக்கு விரட்டுவதோடு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இந்த விவசாய நிலங்களுக்கு அருகில் உள்ள காடுவெட்டி பகுதியில் சுமார் 100க்கும் அதிகமான வீடுகள் உள்ளது. இந்த வீடுகளுக்கு அருகில் முகாமிட்டுள்ள இந்த காட்டு யானைகளால் அந்தப் பகுதி பொதுமக்கள் இரவும் பகலும் அச்சத்தோடு தூக்கம் இன்றி வாழ்ந்து வருகிறார்கள்.
இது பற்றி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வில்லை.எனவே மாவட்ட நிர்வாகம் அந்த பகுதிக்
மக்களை காட்டு யானைகள் தாக்கி உயிர் பலி ஆவதற்கு முன்பாக உரிய நடவடிக்கை எடுத்து காட்டு யானைகளை வனப்பகுதிக்கு விரட்டி விட வேண்டும் என அந்த பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.