முதல்வர் தொடங்கி வைத்த மின்சாரப் பஸ்சின் சிறப்பம்சம்!
1 min read
Highlights of the electric bus inaugurated by the Chief Minister!
30.6.2025
சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள மின்சாரப் பேருந்துகளில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன.
சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் சாா்பில் 625 மின்சாரப் பேருந்துகள் 5 பணிமனைகளின் மூலம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இயக்குவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, சென்னை வியாசா்பாடி பணிமனையிலிருந்து 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(திங்கள்கிழமை) தொடக்கிவைத்தார்.
பேருந்தின் சிறப்பம்சங்கள்
ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கி.மீ. பயணம்
அனைத்து 39 இருக்கைகளிலும் சீட் பெல்ட்
அனைத்து இருக்கைகளுக்கு கீழும் சார்ஜ் போர்ட்
பயணிகள் எண்ணிக்கையைக் கணக்கிட தனி கேமிரா
6 சிசிடிவி கேமிராக்கள்
முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தனி இருக்கை வசதி
13 இடங்களில் அவசர கால பொத்தான்கள்
மாற்றுத்திறனாளிகள், முதியோர்களின் சக்கர நாற்காலியை ஏற்றுவதற்கு சாய்வு பலகை வசதி
பேருந்து நிறுத்தங்களின் விவரங்களை அறிய பேருந்துக்குள் எல்.இ.டி. அறிவிப்பு பலகை
==