சிவகங்கை எஸ்.பி., காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
1 min read
Death of an undertrial prisoner; Sivaganga SP transferred to waiting list
1.7.2025
திருப்புவனம் அஜித் குமார், போலீஸ் விசாரணையில் உயிரிழந்ததை தொடர்ந்து, சிவகங்கை மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் விசாரணை கைதி அஜித் குமார் உயிரிழந்த சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட திருப்புவனம் குற்றப்பிரிவு போலீசார் பிரபு, ஆனந்தன், கண்ணன், சங்கரமணிகண்டன், ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, சிவகங்கை மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி., சந்தீஷ், சிவகங்கை மாவட்டத்துக்கு கூடுதல் பொறுப்பு வகிப்பார் என அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கைது செய்யப்பட்ட போலீசாரின் குடும்பத்தினர், திருப்புவனம் போலீஸ் ஸ்டேசன் முன் இன்று காலை குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் உயர் அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர்.