அரசு ஊழியர்களுக்கு திருமண முன்பணம் உயர்வு! – அரசாணை வெளியீடு
1 min read
Increase in wedding advance for government employees! – Government Order issued
1.7.2025
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருமண முன்பணம் உயர்வு தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் பணிக் காலத்தில் தேவையின் அடிப்படையில் திருமண முன்பணம் வழங்கப்படும். அதன்படி, பெண் ஊழியர்களுக்கு ரூ. 10,000, ஆண்களுக்கு ரூ. 6,000 வழங்கப்பட்டு வந்தது.
கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்நிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில் அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் திருமண முன்பணம் உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்த நிலையில் அதுகுறித்த அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் பொதுவாக இனி ரூ. 5 லட்சம் திருமண முன்பணமாக வழங்கப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.