உச்சநீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக ஊழியர் நியமனத்தில் இடஒதுக்கீடு
1 min read
Reservation in staff appointments for the first time in the history of the Supreme Court
-1.7.2025
கடந்த மே மாதம் உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ண கவாய் பொறுப்பேற்றார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றத்தில் இருந்து அரசியலமைப்பு சட்டத்தின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தி பேசி வருகிறார்.
இந்நிலையில், உச்சநீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக ஊழியர்கள் நியமனம் மற்றும் பதவி உயர்வுகளில் பட்டியலின மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு இடஒதுக்கீடு நடைமுறையை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய். அமல்படுத்தியுள்ளார்
பதிவாளர், சீனியர் தனி உதவியாளர், நூலக உதவி மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களில் பட்டியலின பிரிவினருக்கு 15 சதவீதம், பழங்குடியினர் பிரிவினருக்கு 7.5 சதவீதம் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.