காசா மீதான 60 நாள் போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல்- டிரம்ப் தகவல்
1 min read
Israel agrees to 60-day ceasefire in Gaza – Trump
2.7.2025
இஸ்ரேலுக்கும்-பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போர் 2-வது ஆண்டை நெருங்கி உள்ளது. போர் நிறுத்தத்தை கொண்டு வர அமெரிக்கா முயற்சித்து வருகிறது.
இந்நிலையில் 60 நாள் போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய டிரம்ப், “எனது பிரதிநிதிகள் காசா போர் தொடர்பாக இஸ்ரேலுடன் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் 60 நாள் போர் நிறுத்தத்தை இறுதி செய்வதற்கு தேவையான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது.
அந்த நேரத்தில் போரை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து தரப்பினருடனும் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம். இந்த இறுதி முன்மொழிவை கத்தார்,எகிப்து ஆகிய நாடுகள் வழங்கும். மத்திய கிழக்கின் நன்மைக்காக ஹமாஸ் இந்த ஒப்பந்தத்தை ஏற்கும் என்று நான் நம்புகிறேன். இல்லையென்றால் அவர்களுக்கு இது மோசமானதாக இருக்கும் என்றார்.