திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணமா?-மத்திய அரசு விளக்கம்
1 min read
Is the Corona vaccine the cause of sudden deaths? -Central government explanation
2.7.2025
கர்நாடகாவின் ஹசன் மாவட்டத்தில் 20-க்கும் அதிகமானோர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர். இதற்கு கொரோனா தடுப்பூசி கூட காரணமாக இருக்கலாம் என கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசிக்கும், உயிரிழப்புகளுக்கும் தொடர்பில்லை என மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கொரோனா தடுப்பூசியால் பக்க விளைவுகள் மிக அரிதாகவே இருக்கும்.
திடீர் மரணங்களுக்கு வாழ்க்கை முறையும் பிற நோய்களுமே காரணம் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இளைஞர்களுக்கு ஏற்படும் மாரடைப்புக்கும், கொரோனா தடுப்பூசிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் எய்ம்ஸ் நடத்திய விரிவான ஆய்வுகள், கொரோனா வைரஸ் தடுப்பூசிகளுக்கும், திடீர் மரணங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை உறுதிப்படுத்தி உள்ளது. மரபியல், வாழ்க்கை முறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாரடைப்பு ஏற்படலாம் என தெரிய வந்தது.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.