July 5, 2025

Seithi Saral

Tamil News Channel

லாக் அப்பில் இறந்தவர்கள் பட்டியல் – நயினார் நாகேந்திரன் பதிவு

1 min read

In what way is it fair to say “Sari” in one line..? – Nainar Nagendran Question

2.7.2025
தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், காவலர்களால் படுகொலை செய்யப்பட்ட அஜித் குமாரின் தாயிடம் “”சாரி மா” என்று சொல்லும் நேர்த்தியாக வெட்டி ஒட்டப்பட்ட காணொளியை செய்திகளில் பார்த்தேன்.

ஒரு அப்பாவி இளைஞனைத் துள்ளத் துடிக்கக் கொன்றுவிட்டு, ஒரே வரியில் “சாரி” என்று சொல்வது எந்த வகையில் நியாயமாகும்? இதுபோன்ற மரணங்கள் நிகழாமல் தடுப்பது தானே காவல் துறையை தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு முதல்-அமைச்சரின் கடமை?

சரி, ஒருவேளை மனம் உவந்து தான் முதல்-அமைச்சர் மன்னிப்பு கேட்கிறார் என்றால், இதோ திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் காவல்நிலையங்களிலும், காவல் துறை பாதுகாப்பில் இருந்தபோது சந்தேகத்திற்குறிய வகையிலும் இறந்தவர்களின் பட்டியல்:

  1. பிரபாகரன் (வயது 45) – நாமக்கல் மாவட்டம்
  2. சுலைமான் (வயது 44) – திருநெல்வேலி மாவட்டம்
  3. தாடிவீரன் (வயது 38) – திருநெல்வேலி மாவட்டம்
  4. விக்னேஷ் (வயது 25) – சென்னை மாவட்டம்
  5. தங்கமணி (வயது 48) – திருவண்ணாமலை மாவட்டம்
  6. அப்பு @ ராஜசேகர் (வயது 31) – சென்னை மாவட்டம்
  7. சின்னதுரை (வயது 53) – புதுக்கோட்டை மாவட்டம்
  8. தங்கபாண்டி (வயது 33) – விருதுநகர் மாவட்டம்
  9. முருகாநந்தம் (வயது 38) – அரியலூர் மாவட்டம்
  10. ஆகாஷ் (வயது 21) – சென்னை மாவட்டம்
  11. கோகுல்ஸ்ரீ (வயது 17) – செங்கல்பட்டு மாவட்டம்
  12. தங்கசாமி (வயது 26) – தென்காசி மாவட்டம்
  13. கார்த்தி (வயது 30) – மதுரை மாவட்டம்
  14. ராஜா (வயது 42) – விழுப்புரம் மாவட்டம்
  15. சாந்தகுமார் (வயது 35) – திருவள்ளூர் மாவட்டம்
  16. ஜெயகுமார் (வயது 60) – விருதுநகர் மாவட்டம்
  17. அர்புதராஜ் (வயது 31) – விழுப்புரம் மாவட்டம்
  18. பாஸ்கர் (வயது 39) – கடலூர் மாவட்டம்
  19. பாலகுமார் (வயது 26) – இராமநாதபுரம் மாவட்டம்
  20. திராவிடமணி (வயது 40) – திருச்சி மாவட்டம்
  21. விக்னேஷ்வரன் (வயது 36) – புதுக்கோட்டை மாவட்டம்
  22. சங்கர் (வயது 36) – கரூர் மாவட்டம்
  23. செந்தில் (வயது 28) – தர்மபுரி மாவட்டம்

இவர்களது பெற்றோரிடமும், மனைவி-மக்களிடமும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மன்னிப்பு கேட்கும் போட்டோ-வீடியோ ஷூட் எப்பொழுது நடக்கும்?

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.