ஆழ்வார்குறிச்சி கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
1 min read
Aalwar Kurichi College alumni meet
2.7.2025
ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தென்காசி வட்டார சந்திப்பு மற்றும் செயற்குழு கூட்டம் பழைய குற்றாலத்தில் உள்ள அன்ரிகா ரிசார்ட்ஸில் விமரிசையாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கல்வி, மருத்துவம் மற்றும் சமூக சேவையில் சிறந்து விளங்கும் பல பிரபல முன்னாள் மாணவர்கள் பங்கேற்று நிகழ்ச்சிக்கு மெருகூட்டினர்.
நிகழ்ச்சி தமிழ்தாய் வாழ்த்துடன் துவங்கியது.
துணை பொதுச்செயலாளர் எஸ். முருகேசன் வரவேற்புரை வழங்கினார்.
முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் எஸ். வி. பெருமாள் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.
முன்னாள் தலைவர் வி. டி. ராஜன், துணைத் தலைவர் எஸ். தங்கம், தென்காசி வட்டச் செயலாளர் திரு. மு. மொஹியதீன் பிச்சை முன்னிலை வகித்தனர்.
கௌரவ விருந்தினர்களாக கல்லூரி முதல்வர் முனைவர் சி. முத்துலட்சுமி மற்றும் கடந்த வருடம் ஓய்வு பெற்ற முதல்வர் எஸ். மீனாட்சி சுந்தர் மற்றும் முக்கிய சிறப்பு விருந்தனராக முன்னாள் மாணவர் மருத்துவர். கே. முருகையா, மகாலட்சுமி நர்சிங் ஹோமின் இயக்குநரும், அமர் சேவா சங்கத்தின் துணைத் தலைவரும், சிறப்புரையாற்றி நிகழ்ச்சியை சிறப்பித்தனர். சிறப்பு விருந்தினருக்கும், கௌரவ விருந்தினர்களுக்கும் தலைவர் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசினை வழங்கி கௌரவித்தார்.
மேலும் அமர் சேவா சங்கத்தின் நிறுவனர் பத்ம ஸ்ரீ எஸ். ராமகிருஷ்ணன், முன்னாள் முதல்வர்கள் எம். சுந்தரம், மற்றும் வெட்கட்ராமன், பேராசிரியர் எஸ். விஸ்வநாதன், துறைத் தலைவர், மைக்ரோபயாலஜி, எம். பாலசுப்ரமணியன், வட்டச் செயலாளர், திருநெல்வேலி, கே. எம். சண்முகம், முதன்மை அதிகாரி அமர் சேவா சங்கம், ஆய்குடி, முனைவர் ஏ. ஜி. முருகேசன், மேல்முறையீட்டு உறுப்பினர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மேலும் 25ம் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தை வரும் ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி வெகு விமர்சையாக நடத்தவும், பொதுக்குழு கூட்டத்திற்கு நமது கல்லூரியின் சேர்மன் அவர்களை சிறப்பு விருந்தினராக அழைக்கவும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
அடுத்து 2025- 2027 க்கான நிர்வாக குழுவை தேர்தல் இன்றி ஒரு மனதாகவும் தேர்வு செய்யவும் முடிவு செய்யப்பட்டது. நிகழ்ச்சி தென்காசி வட்டச் செயலாளர் அம்பலவாணன் நன்றியுரையுடன் நிறைவு பெற்றது. நிகழ்ச்சியில் நிர்வாகிகள் மற்றும் முன்னாள் மாணவர்கள் பலரும் தங்கள் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் வந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இந்நிகழ்ச்சியை சங்கப் பொதுச்செயலாளர் எம். முகைதீன் பிச்சை தொகுத்து வழங்கினார்.