தென்காசியில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
1 min read
Postgraduate teachers hold protest in Tenkasi to draw attention
2.7.2025
தென்காசி மாவட்ட தமிழக முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு மாநிலந் தழுவிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் காளிராஜ் தலைமையேற்றார். மாநில துணைத் தலைவர் கலைச்செல்வி மாவட்ட துணைத் தலைவர் தனலெட்சுமி உதவி பெறும் பள்ளி செயலர் இசக்கிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் தோழர் முத்துக்குமார் வரவேற்புரையாற்றினார்.
தோழமைச் சங்க நிர்வாகிகள் மாநிலத் துணைத் தலைவர் முருகையா, மாவட்ட நிர்வாகி இசக்கியப்பன், மாவட்ட இணைச் செயலர் முப்புடாதி மாநில செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கலைச் செல்வி துவக்கவுரை நிகழ்த்த சதீஷ் குமார் கோரிக்கை விளக்கவுரை நிகழ்த்தினார்.
பதவி உயர்வு கலந்தாய்வுக்குப் பின் மாறுதல் கலந்தாய்வு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கை மற்றும் ஆசிரியர்களிடம் மாதந்தோறும் நிர்வாகங்கள் பணம் சுரண்டுதலைக் கண்டித்தும் முதன்மைக் கல்வி அலுவலரின் விதிமீறல்களைக் கண்டித்தும் எழுத்துப் பூர்வமான ஆணையின்றி விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளைக் கண்டித்தும் பள்ளி வேலை நேரத்திற்குப் பிறகு மாதத் தேர்வு நடைமுறையைக் கைவிட வலியுறுத்தியும் உரையாற்றினர்.