குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் கல்லூரி சந்தை விற்பனை கண்காட்சி திறப்பு விழா
1 min read
Inauguration of the College Market Sales Exhibition at Sri Parasakthi Women’s College, Courtallam
3.7.2025
தென்காசி மாவட்டம் குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி சந்தை மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்கள் விற்பணை கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் துவக்கி வைத்தார்.
தென்காசி மாவட்டம் குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி சந்தை மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்கள் வி பனை கண்காட்சி துவக்க விழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் துவக்கி வைத்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், கூறியதாவது:-
தென்காசி மாவட்டத்தில் மகளிர் திட்டம் மூலம் ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய ஏதுவாக பல்வேறு விதமான முன்னெடுப்புகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் கண்காட்சிகள், கல்லூரி சந்தைகள், அரசு விழாக்கள் மற்றும் பண்டிகை காலங்களில் விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டு விற்பனை மேற்கொள்ளப்படுகிறது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று முதல் 04.072025 வரை 3 நாட்கள் விற்பனை கண்காட்சி நடைபெறுகிறது. இந்த விற்பனை கண்காட்சியில் திருச்சி. இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை. புதுகோட்டை, ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்கள் கலந்து கொண்டனர். மேலும் இக்கல்லூரி சந்தையில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் சிறுதானிய உணவுப் பொருட்கள், பீட்ரூட் மால்ட், ஜீட்பேக், கீ செயின், கை கடிகாரம், நைட்டிகள், கைத்தறி காட்டன் புடவைகள், செயற்கை ஆபரணங்கள், மூங்கில் பிரம்பு பொருட்கள், 90 கிட்ஸ் பொருட்கள், பினாயில், ஊறுகாய் வகைகள் முருங்கை பொடி நலங்குமாவு, கஸ்தூரி மஞ்சள் பொடி ஆகியன இடம் பெற்றுள்ளன என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்தார்.
இந்த விற்பனைகண்காட்சியில் கலந்து கொண்ட மகளிர் சுயஉதவிக்குழு உற்பத்தியாளர்கள் மாவட்ட நிர்வாகத்தின் இந்த ஏற்பாட்டின் மூலம் எங்களது விற்பனைக்கு பெரும் வாய்ப்பாக அமைந்தது என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர், (மு.கூ.பொ) (மகளிர்திட்டம்) மைக்கேல் அந்தோனி பெர்னாண்டோ மகளிர் திட்டம் உதவி திட்ட அலுவலர்கள் பொ.டேவிட் ஜெயசிங், மு.மாரிஸ்வரன் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.