கானா நாட்டில் பிரதமர் மோடிக்கு உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
1 min read
Prime Minister Modi honored with highest award in Ghana…
3.7.2025
பிரதமர் மோடி 5 நாடுகளுக்கு 8 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல்கட்டமாக கானா நாட்டிற்கு சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அரசு பயணமாக கானா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, ‘The Officer of the Order of the Star of Ghana’ என்ற விருதை வழங்கி கானா அரசு கௌரவித்துள்ளது. இந்த விருது மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் தேசிய மரியாதையாக கருதப்படுகிறது.
கானா நாட்டை தொடர்ந்து டிரினிடாட் மற்றும் டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி செல்லவுள்ளார். மேலும், வரும் 6, 7ம் தேதி பிரேசிலில் நடக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டிலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.