தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் 6 பேருக்கு குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறை
1 min read
Six people jailed under the Prevention of Gangsters Act in a single day in Tenkasi district
3.7.2025
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏகே கமல் கிஷோர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ் அரவிந்த் ஆகியோர் உத்தரவு படி 6 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க்பட்டனர்.
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் காவல் நிலைய கொலை வழக்கின் குற்றவாளியான பனையடிப்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த துரைசாமி என்பவரின் மகன் மணிக்குமார் (வயது 42), சிவகிரி காவல் நிலைய கஞ்சா வழக்கின் குற்றவாளியான தேவிப்பட்டினம் காமராஜர் தெருவை சேர்ந்த வேல்சாமி என்பவரின் மகன் கலைசெல்வன் (வயது 20), புளியங்குடி காவல் நிலைய கஞ்சா வழக்கின் குற்றவாளியான வாசுதேவநல்லூர் புதுமனை மூன்றாவது தெருவை சேர்ந்த முத்துப்பாண்டியன் என்பவரின் மகன் இளங்கோவன் (வயது 29), சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கின் குற்றவாளியான பழங்கோட்டை கிழக்கு தெருவை சேர்ந்த மருதன் என்பவரின் மகன் வேல்முருகன் (வயது 40), ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய கஞ்சா மற்றும் ஆயுதத் தடை சட்ட வழக்கின் குற்றவாளியான அடைச்சாணி வடக்கு தெருவை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் மாரியப்பன், மற்றும் ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் குற்றவாளியான குறும்பலாப்பேரி குலசேகரன் தெருவை சேர்ந்த லட்சுமணன் என்பவரின் மகன் பிரபாகர் @ பிரபு (வயது 27) ஆகியோர் மீது பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். அரவிந்த்ஸ பரிந்துரையின் பேரில், தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் உத்தரவின் பேரில் மேற்படி ஆறு நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தென்காசி மாவட்டத்தில் உள்ள தொடர் குற்றவாளிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.