திருச்செந்தூர் கும்பாபிஷேகம்: 7-ந் தேதி தென்காசி மாவட்டத்திற்கு விடுமுறைவிட கோரிக்கை
1 min read
Tiruchendur Kumbabhishekam: Request to declare a holiday for Tenkasi district on the 7th
3/7/2025
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வருகிற ஜூலை 7ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளிக்க கோரி தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவ பத்மநாபன் மாவட்ட ஆட்சியர்
ஏ.கே.கமல் கிஷோருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அந்த மனுவில் அவர் தெரிவித்திருப்பதாவது,
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் வருகிற ஜூலை 7ஆம் தேதி திங்கட்கிழமை அன்று கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற இருக்கிறது. இந்த விழாவில்
பல லட்சம் பக்தர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
தென்காசி மாவட்டத்தை பொருத்த அளவில் முருக பக்தர்கள் தைப்பூசம், மாசி மகம் ,வைகாசி விசாகம் ,என பல லட்சம் பேர் முருகன் கோவிலுக்கு காவடி தூக்கியும் நடை பயணமாகவும் வேண்டுதலுக்காக சென்று வருகிறார்கள்
தற்போது நடைபெறும் கும்பாபிஷேக நிகழ்ச்சியை முன்னிட்டு வருகிற 7 ம் தேதி
திங்கள்கிழமை தென்காசி மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறை வேண்டும் என்று முருக பக்தர்கள் எதிர்பார்க்கிறார்கள். தமிழ் கடவுளான முருக பெருமானுக்கு நடைபெறுகிற கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள விரும்புகிறார்கள்
முந்தைய காலங்களில் திருச்செந்தூரும் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து பிரிந்த மாவட்டம் ஆகும் அதனால் முருகபக்தர்களின் எதிர்பார்ப்பு நியாயமானதாக தெரிகிறது
ஆகையால் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர முருக பக்தர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்து வருகிற 7 ம் தேதி திங்கள்கிழமை திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் நடைபெறும் மகா கும்பாபிஷேக விழாவிற்கு ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டுகிறார்கள்.
தாங்களும் கனிவுடன் பரிசீலனை செய்து விடுமுறை வழங்கிட கேட்டுக் கொள்வதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது