July 4, 2025

Seithi Saral

Tamil News Channel

குத்தபாஞ்சான்: உடற்கல்வி ஆசிரியர் வீட்டில் 25 பவுன் நகை, ரூ.75 ஆயிரம் கொள்ளை

1 min read

25 pounds of jewelry and Rs. 75 thousand stolen from physical education teacher’s house near Alankulam

4/7/2025
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் ஆசிரியர்களின் வீடுகளை குறி வைத்து கொள்ளை அடிக்கும் கும்பல்
ஆலங்குளம் அருகே உடற் கல்வி ஆசிரியர் வீட்டில் பூட்டை உடைத்து 25 பவுன் நகை மற்றும் ரூ.75 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஏற்கெனவே கடந்த 29 ம் தேதி தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அடைக்கலப்பட்டினம் அருகே உள்ள நவநீதகிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் இவர் நெல்லை-தென்காசி நான்குவழிச் சாலையில் அடைக்கலப் பட்டணம் ஊருக்கு கீழ்புறத்தில் மெட்ரிக் பள்ளி, சிபிஎஸ்இ பள்ளி மற்றும் பி.எட் கல்லூரி நடத்தி வருகிறார். அவரது கல்வி நிறுவனத்தை அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் கவனித்து வருகின்றனர்.

இவர்களது கல்வி நிறுவனத்தின் வளாகத்திற்குள்ளேயே ராஜசேகர் வீடு கட்டி குடியிருந்து வருகிறார். நேற்று வெளியூரில் நடைபெற்ற தனது உறவினர் இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக ராஜசேகர் தனது குடும்பத்தினருடன் புறப்பட்டு சென்றுவிட்டார்.

இதனால் வீட்டில் யாரும் இல்லாத நிலையில், கல்வி நிறுவன வளாகத்தில் இருந்த காவலாளிகள் காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஞாயிற்றுக்கிழமை காலை ராஜசேகரின் மனைவி மகேஸ்வரி மட்டும் வந்தார். அப்போது, வீடு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்துள்ளது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த ஒரு கிலோ தங்கம் மற்றும் 50 லட்ச ரூபாய் ரொக்கம் ஆகியவை திருடு போயிருந்தது. இதுபற்றி ராஜசேகரின் மனைவி மகேஸ்வரி ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

தகவலறிந்த தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். அரவிந்த், தலைமையில் ஆலங்குளம் போலீஸார் சம்பவம் நடந்த வீட்டை பார்வையிட்டு தீவிர விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள குத்தபாஞ்சான் பஞ்சாயத்து மேலபரும்பு குறிஞ்சி தெருவில் வசித்து வரும் யோவான் என்கிற வைத் திலிங்கம் (வயது 55) கூலித்தொழிலாளி இவரது மகன் திலீப்குமார் (வயது 32) என்ப வர் சென்னையில் உடற்கல்வி ஆசிரியராக வேலைசெய்து வருகிறார். இவர் தனது மனைவி இஹா மற்றும் மகன் ஆதிரன் (4) மஹிஷா (10 மாத குழந்தை) ஆகியோருடன் கடந்த மாதம் கோயில் கொடை விழாவுக்கு ஊருக்கு வந்து விட்டு சென்றனர்.

இந்நிலையில் யோவான் தனது மனைவி லட்சுமியுடன் நெல்லை அரசு மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வரும் அவ ரது உறவினரை பார்ப்பதற் காசு கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்றனர்.

இந்நிலையில் வீட் டில் யாரும் இல்லாததை அறிந்து கொண்ட மர்மநபர்கள் நேற்று முன்தினம் இரவு வீட்டின் மாடி வழியாக சென்று வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதிலிருந்த 25 பவுன் நகை மற்றும் ரூ.75 ஆயிரம் ரொக்கம் ஆகிய வற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்நிலையில் நேற்று காலை யோவான் அவரது மனைவியுடன் வீடு திரும்பிய போது, கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் நுணிகள் சிதறி கிடந்த நிலையில் வாக்கரில் இருந்த நகை, காணாமல் போனது தெரிய வந்தது.

இதுகுறித்து யோவான் உடனடியாக கடை யம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் பேரில் ஆலங்குளம் டிஎஸ்பி கிளாட்சன் ஜோஸ், தென்காசி குற் றப்பிரிவு இன்ஸ்பெக்டர் காளிமுத்து, இன்ஸ்பெக்டர்கள் கடையம் சுரேஷ் குமார், சிவகிரி பாலமுருகன், கடையநல்லூர் ஆடிவேல், ஆலங்குளம் பெர்னாட் சேவியர், எஸ்ஐ உமாமகேஷ் வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். கைரேகை நிபுணர் வரவ ழைக்கப்பட்டு விரல் ரேகைகளை பதிவு செய்தனர். இதைதொடர்ந்து அந்த வீட் டின் அருகிலுள்ள சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்தனர். அதில் ஹெல்மட் அணிந்த பைக்கில் அந்த வீட்டருகே மர்மநபர்கள்
இரவு நேரத்தில் நோட்ட மிட்டபடி சென்றது பதிவா கியுள்ளது. இதனை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆலங்குளம் அருகே அடைக்கலப்பட்டணத் தில் தனியார் பள்ளி உரி மையாளர் வீட்டில் 1.15 கிலோ தங்க நகை மற்றும் ரூ.50 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மாடி வழியாக வந்து கொள்ளையடித்து சென்ற னர். அதே போன்று உடற்கல்வி ஆசிரியர் வீட்டிலும் மாடி வழியாக தான் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். எனவே, இந்த 2 கொள்ளை சம்ப வங்களிலும் ஈடுபட்டிருப்பது ஒரே கும்பலா? அல்லது வேறு கும்பலா? என்பது உள் ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் தொடர்ந்து ஆசிரியர்களின் வீடுகளை குறி வைத்து கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருவது அந்தப் பகுதிகளைச் சார்ந்த ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.