ஆபாச பேச்சு: பொன்முடியின் மீதான விசாரணைக்கு போலீசார் தயங்கினால்… ஐகோர்ட் எச்சரிக்கை
1 min read
Ponmudi’s obscene speech; If the police hesitate to investigate, it will be transferred to the CBI; High Court warns
4/7/2025
”ஆபாச பேச்சு தொடர்பாக, முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்குகளில் புலன் விசாரணை செய்ய போலீசார் தயங்கினால் வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்படும்” என சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமீபத்தில், ஹிந்து மதத்தையும், பெண்களையும் பொன்முடி ஆபாசமாக பேசியது, தமிழகம் முழுவதும் எதிர்ப்பை கிளப்பியது. பொன்முடிக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று (ஜூலை 04) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ”தமிழகம் முழுவதும் 112 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றின் மீது புலன் விசாரணை நிலுவையில் உள்ளது” என விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து ஐகோர்ட் நீதிபதிகள் கூறியதாவது: பேசுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கும் போது, அமைச்சராக பதவி வகித்தவர் ஏன் இதுபோல பேச வேண்டும். அமைச்சராக இருந்தவர் என்ன சொல்கிறோம் என்பதை புரிந்து பேச வேண்டும்.
ஆபாச பேச்சு தொடர்பாக, முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்குகளில் புலன் விசாரணை செய்ய போலீசார் தயங்கினால் வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்படும்.
இவ்வாறு சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.