பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
1 min read
Prime Minister Modi receives enthusiastic welcome in Brazil
6.7.2025
பிரதமர் நரேந்திர மோடி கானா, டிரினிடாட் அண்டு டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
கானா, டிரினிடாட் அண்டு டொபாகோ மற்றும் அர்ஜென்டினா நாடுகளின் பயணத்தை முடித்துக்கொண்டு பிரேசில் நாட்டிற்கு பிரதமர் மோடி சென்றார். பிரேசில் நாட்டில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று தொடங்கிய பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். நாளையும் மாநாடு நடக்கிறது.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், “ரியோ டி ஜெனிரோவில் பிரேசிலின் இந்திய சமூகத்தினர் மிகவும் துடிப்பான வரவேற்பை அளித்தனர். அவர்கள் இந்திய கலாச்சாரத்துடன் எவ்வாறு இணைந்திருக்கிறார்கள் என்பதும், இந்தியாவின் வளர்ச்சியில் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதும் ஆச்சரியமாக இருக்கிறது!” என்று தெரிவித்துள்ளார்.